ஹிஜாபுடன் ஆள்அடையாள அட்டைக்கான புகைப்படத்தை எடுப்பதற்கு ரஷ்யா அங்கீகாரம்.




ரஷ்யாவில் வேலைநிமித்தம் வந்துள்ள முஸ்லிம்பெண்களுக்கு, ஆள்அடையாள அட்டைக்கான பத்திரங்களின் போது ஹிஜாப் அணிந்து புகைப்படம் எடுப்பதற்கு ரஷ்ய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.முகத்தை மறைக்காமல் ஹிஜாப் அணிந்து புகைபப்படம் எடுப்பதற்கு மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் மத்திய குடிவரவு சேவையின் பேச்சாளர் ஸலினா கோர்னில்வோ தெரிவித்துள்ளார். இதே நடைமுறையே ரஷ்யாவின் கடவுச்சீட்டு புகைப்படங்களிலும் கடைபிடிக்கப்பட்டுவருவதாக கோர்னில்வோ மேலும் தெரிவித்துள்ளார். சர்வதேச மனிதஉரிமை உடன்படிக்கைகள் மற்றும் ரஷ்யாவின் மத்திய அரசாங்கத்தின்அரசியலமைப்பின் படி ரஷ்யாவில் மதரீதியான வணக்கங்களுக்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ புகைப்படங்களை ஹிஜாபுடன் எடுப்பதற்கு எதிராக 2003ஆம் ஆண்டு ரஷ்யாவின் உள்நாட்டு அமைச்சினால், அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன்முறையீடு  வெற்றியளிக்கவில்லை.எனவே புகைப்படமெடுத்தல் மற்றும் கைரேகை அடையாளம் தொடர்பாக புதியசட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments