பாகிஸ்தான் அரசுடான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஜனரஞ்சக இஸ்லாமியஅறிஞர் ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக்கொண்டுவருமாறு அழைப்பு.




பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,தேர்தல் சட்டத்தில்திருத்தத்தைக் கொண்டுவருமாறும் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றுவந்த பாரிய மக்கள் ஆர்ப்பட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு  உலகப்புகழ்பெற்ற பாகிஸ்தானனைச் சோந்த இஸ்லாமிய அறிஞரான கலாநிதி முஹம்மத் தாஹிர் உல் காதிரி தனது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். ஜனவரி 14ஆம் திகதி இஸ்லாமாபாத் நகரில் ஆரம்பமான பாரிய மக்கள் ஆர்ப்பாட்டம் நான்கு நாட்களாக நடைபெற்று வந்ததது. வியாழக்கிழமையன்று பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்ததையின் போது ஏற்பட்ட இணக்கப்பாட்டின் படி எதிர்வரும் மாhச்மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நான்காவது நாள் வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக்கொண்டுவரும் போது பேசிய கலாநிதி தாஹிர் உல்காதிரி, தாங்கள் அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும்,ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் வழங்கிய வெற்றிக்கு தாம் நன்றி தெரிவப்பதாகவும், இன்றைய நாள் பாகிஸ்தான் மக்களுக்கு வெற்றியுடைய நாள் எனவும் தெரிவித்தார்.இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக சமாதான ஆர்ப்பாட்டத்தை தலைநகர் இஸ்லாமபாத்தில் நடத்துவதற்கு தமது ஆதராவாளர்களுக்கு காலாநிதி தாஹிர் உல் காதிரி அழைப்புவிடுத்திருந்தார் .சில நாட்களுக்கு முன்னர்,ஊழல் தொடர்பில் பாகிஸ்தானின் பிரதமர் ரஸா பர்வீஸ் அஷ்ரபை கைதுசெய்யுமாறு பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்துக்கு அந்நாட்டு ஊழல் எதிர்ப்பு ஆணையகம் அழைப்புவிடுத்திருந்தது. பிரதமரை கைதுசெய்வது தொடர்பில் போதுமான ஆதாரங்கள் இல்லை என பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரியால் நியமிக்கப்பட்ட தேசிய கணக்காளர் ஆணையகத்தின்தலைவர் பாயிஸ் புகாரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments