இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படத்தை வெளியிட்டதன் தொடர்பில்,
யூடியூப் சமூக இணையதளத்தை 30நாட்களுக்கு தடைசெய்வதற்கு கெய்ரோ நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.புனித இஸ்லாத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவதிக்கும் வகையில் யூடியூப் இணையதளத்தில்வெளியிடப்பட்ட திரைப்படமானது, எகிப்தியர் ஒருவரால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பதன் தொடர்பிலேயே இவ்இணையதளம் தடைசெய்யப்படவுள்ளது.யூடியூப் சமூக இணையதளத்தை தடைசெய்யுமாறு சனிக்கிழமையன்று நீதிபதி ஹஸ்ஸவ்னா தௌபீக் எகிப்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் எகிப்தின் தேசிய பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலாக அமையும் என்று கோரி கடந்தவருடம் எகிப்தைச் சேர்ந்த சட்டத்தரணி முஹம்மட் ஹமாமிட் ஸலீமினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. இணையதளங்களை தடைசெய்வதன் மூலம் எகிப்தில் இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து நடைபெற்ற தாக்குதல்களை நிறுத்த முடியாது என கடந்தகால நீதிமன்றத் தீர்ப்புகள் அமைந்திருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து எகிப்து உட்பட 20க்கும் அதிகமான நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments