சுவீடனின் வரலாற்றில் முதல்தடவையாக ஒலிபெருக்கி மூலம் அதான் சொல்ல அனுமதி.




சுவீடனின் தலைநகர் ஸ்டக்ஹோம் நகரில் முதல்தடவையாக ஒலிபெருக்கிகள் மூலம் அதான் சொல்வதற்கு ஸ்டேக்ஹோமில் அமைந்துள்ள ஓர் நகரசபையினூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டக்ஹோம் நகரில் அமைந்துள்ள புத்கிர்க்கா நகரசபைப் 

பகுதியானது அதிகமாக வெளிநாட்டு குடியேற்றங்களால் பிரசித்திபெற்ற பிரதேசமாக விளங்குகின்றது.புத்கிர்க்கா இஸ்லாமிய கலாசார நிலையத்தினூடாக ,ஒரு மாதகாலத்திற்கு முன்னர் நகரசபையிடம் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக பிட்ஜா பள்ளிவாசலில் மினாரத் ஒலிபெருக்கிகள் மூலமாக அதான் சொல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.அண்மையில், இக்கோரிக்கையை நகரசபை கவுன்ஸில் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.தொழிநுட்ப வேலைகளை பூர்திசெய்த பின்னர்,மார்ச் மாதம் அளவில் முதலாவது அதான் பிட்ஜா பள்ளிவாசலின் மினாரத்தினூடாக ஒலிபரப்பப்படும் என இஸ்லாமிய கலாசார நிலையத்தின் தலைவர் இஸ்மாயில் ஒக்கூர் உள்நாட்டு 
செய்திஸ்தபானமொன்றுக்கு தெரிவித்துள்ளார். புத்கிர்க்கா பிரதேசமானது முஸ்லிம்களால் பிரிசித்திபெற்ற இடமாக விளங்குவதுடன், சுவீடனில் மினாரத்தைக் கொண்டுள்ள ஒரே பள்ளிவாசலான பிட்ஜா மஸ்ஜித் இங்கு அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments