உலகில் மிகப்பரந்த எண்ணெய் வளத்திற்கு மிகப்பிரசித்திபெற்ற இடமாக
மத்தியகிழக்கு பிரதேசம் காணப்படுகின்றது.எனினும் இப்பிரதேச நாடுகள்மின்சாரத்தை விநியோகிப்பதற்கு புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன.இவ்வாறான நடவடிக்கைகளில் ஐக்கிய அரபு இராச்சியம்மிகமுக்கியமாக ஈடுபட்டுவருகின்றது. இவ்வகையில், உலகின் மிகப்பெரியசூரியமின்சக்தி நிலையம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபூதாபிநகரில் திறக்கப்பட்டுள்ளது.இம்மின்சார நிலையத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷம்ஸ் மின்சக்தி நிறுவனம் திறந்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ஷம்ஸ் மின்சார நிலையத்தின் மூலம் 100 மெகா வோட்ஸ் கொள்ளளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன்,இதன் மூலம் 20,000 வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிப்பதற்கு முடியாகவுள்ளது.மேலும் இம்மின்சார நிலையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 175,000 டொன்னுக்கும் அதிகமான காபன்டைஒக்சைட் வாயு வளிமண்டலத்திற்கு வெளியிடப்படுவது தடுக்கப்படுகின்றது. ஷம்ஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி நிலையமானது, 1.5மில்லியன் மரங்கள் நடப்பட்ட பிரதேசத்துக்கு அல்லது பாதையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 15,000 கார்களை உள்ளடக்கிய நிலப்பரப்புக்கு சமானான அளவைக்கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments