கிரேக்கத்தின் தெஸலோனிகியில் அமைந்துள்ள 111வருடங்கள் பழமைவாயந்த பள்ளிவாசலொன்று 90வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது. 1902ஆம் ஆண்டு ஒர் இத்தாலியகட்டிடக்கலைஞரால் கட்டப்பட்ட இப்பள்ளிவாசலானது 1923ஆம் ஆண்டு மூடப்பட்டது.1925முதல் 1963ஆண்டு வரை மேற்படி பள்ளிவாசலானது பழமையான அருங்காட்சியாமாக பயன்படுத்தப்பட்டதுடன், அதன்பின்னர் தெஸலோனிகி மாநகரசபை கண்காட்சி மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், கிரேக்கத்தின் தலைநகர் ஏதேன்ஸில் முதலாவது பள்ளிவசாலொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதென்ஸில் ஏறத்தாள 30,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றதுடன், அவர்களுக்கு தொழுகை நடத்துவதற்கு அங்கு பள்ளிவாசல் இல்லை என்பது குறிப்பிடததக்கது.
0 Comments