இஸ்ரேலின் இணையதளங்கள் மீது பாரிய சைபர் தாக்குதல்கள் ஏப்ரல்
7,ஞாயிற்றுக் கிழமையன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதனால் ஞாயிற்றுக்கிழமை முன்னதாக இஸ்ரேலின் பல இணையதளங்கள் பாவனையிலின்றி காணப்பட்டுள்ளன.துருவிச் செயற்பாட்டு குழுவொன்றினால் மேற்படி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வெள்ளிக்கிழமையன்று யூடியூப் சமூக இணையதளத்தில் வீடியோ செய்தியொன்று குறித்த துருவிகள் செயற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்டிருந்தது. அதில், உலகின் முன்னணி துருவிகுழுக்கள் பலஸ்தீனர்களுடன் ஒற்றுமை மற்றும் ஐக்கியபட்டு இஸ்ரேலுக்கு எதிராக நின்று அதன் இணைய வெளியை அழிப்போம் என குறிப்பிட்டிருந்தது.மேலும் அது ஏப்ரல்,7ஆம் திகதியென்றுகுறித்த துருவி செயற்பாட்டு நிறுவனம் மேலும் குறிப்பிட்டிருந்தது.குறித்த துருவிக்குழு இஸ்ரேலை இணையத்தில் இருந்து அழிக்கும் சைபர் தாக்குதலுக்கு ஒபி-இஸ்ரேல் என பெயர் குறிப்பிட்டிருந்ததுடன்,சைபர் தாக்குதலின் போது பின்வரும் செய்தியை இஸ்ரேலிய அரசுக்கு வெளியிட்டிருந்தது.
'நீங்கள் முடிவற்ற மனித உரிமைகளை மீறல்களை நிறுத்தவில்லை, நீங்கள் சட்டரீதியற்ற குடியிருப்புக்களை நிறுத்தவில்லை, நீங்கள் போர்நிறுத்த உடன்படிக்கையை மதிக்கவில்லை, சர்வதேச சட்டங்களுளை தாம் மதிப்பதில்லை என்பதை நீங்கள் காட்டினீர்கள்.'
ஏறத்தாள 1300 இஸ்ரேலிய இணையதளங்களே தமது இலக்காகும் என துருவி செயற்பாட்டுக்குழு தெரிவித்திள்ளது.ஞாயிற்றுக்கிழமையன்று ஏறத்தாள 19,000 இஸ்ரேல் பேஸ்புக் பாவனையாளர்களின் கணக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலின் உள்நாட்டு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதலின் மூலம் 30,000க்கும் அதிகமான இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல்வாதிகள்,மோஸாட் முகவர்கள் மற்றும் அரசஅதிகாரிகளின் சொந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக குறித்த துருவிக்குழு அதன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.தற்போது இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதலானது இரண்டாவது ஒபி-இஸ்ரேல் தாக்குதல் என அழைக்கப்படுகின்றது. முதலாவது ஒபி-இஸ்ரேல் தாக்குதல்,கடந்த வருடம் நவம்பரில் காஸா-இஸ்ரேல் இடையில் இடம்பெற்ற போரின் போது தொடங்கப்பட்டதுடன், அதன்போது ஏறத்தாள 700 இஸ்ரேலிய இணையதளங்கள் தாக்கப்பட்டன.கடந்த நவம்பரில் இஸ்ரேலிய இணையதளங்களின் மீது 22மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் நிதி அமைச்சு செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Ⓒmuslimulakam
0 Comments