உலகநாடுகளின் இஸ்லாமிய அறிஞர்கள் 'இஜ்மா' தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பு.




துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் நடைபெறும் 'இஜ்மா' தொடர்பான கருத்தரங்கில்,உலகின் 80நாடுகளைச் சோந்த இஸ்லாமிய அறிஞர்கள்
கலந்துகொண்டுள்ளனர்.சனிக்கிழமை ஆரம்பான இக்கருத்தரங்களில், இஜ்மா பற்றிய தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக மேற்படி உலகநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்தான்பூல் நகரில் ஒன்றுகூடியுள்ளனர். 'இஜ்மா-பொதுப்பாதைவரைபடம் மற்றும் கூட்டுவழிப்புணர்வு' என்பதே இக்கருத்தரங்கின் தொனிப்பொருளாகும். இந்நிகழ்வின் முக்கிய பேச்சாளர்களாக எகிப்தின் முன்னாள் தலைமை முப்தி கலாநிதி அலி ஜும்ஆ, டியூனியா அந்நஹ்ழா கட்சியின் தலைவர் ராஷித் அல்-கன்னூசி,பேராசிரியர் அஹமத் அபாதி,பேராசிரியர் சஆத்
அபூபக்கர்,பேராசிரியர் இஸ்லாம் பேஷிரி,பேராசிரியர் முஹம்மத் இம்ரா மற்றும் அறிஞர் ஸல்மான் ஹூசைன் அந்நத்வி கலந்துகொண்டுள்ளனர். இக்கருத்தரங்கில் ஏறத்தாள 4000பேர் பின்தொடர்கின்றனர்.கருத்தரங்கின் நிகழ்வுகள் துருக்கி,குர்திஷ், அரபு,ஆங்கிலம் மற்றும் பிரென்ஞ் போன்ற மொழிகளில் நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றது.முதல்நாள் நிகழ்வின் ஆரம்ப உரையை துருக்கியின் மதவிவகாரத் தலைவர் பேராசிரியர் முஹம்மத் குர்மேஸ் நடத்தினார்.இக்கருத்தரங்கை துருக்கியின் புகழ்பெற்ற சஞ்சிகைகளான யெனி உமித் மற்றும் ஹிரா என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.








Post a Comment

1 Comments