சவூதிஅரேபிய அரசு உம்ராவை 15நாட்களாக மட்டுப்படுத்தியுள்ளது.



புனித மக்காவின் ஹரம் பள்ளிவாசலில் தொடரும் கட்டுமாண வேலைகள் காரணமாக, உம்ரா கடமைகளுக்காக வரும் யாத்திரீகர்களுக்கு 15நாட்களுக்கு மேலாக சவூதிஅரேபியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டது என அறிவித்துள்ளது. புனித உம்ராக் கடமைக்காக வரும் யாத்திரீகர்கள் புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களில் அதிக நாட்கள் தங்குவதனால் இடநெருக்கடி ஏற்படுவதுடன்,இது புனித பள்ளிவாசல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமாண வேலைகளுக்கு பெரும் தடையாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் தொகுப்பொன்றை வரைந்துள்ளதாக சவூதிஅரேபியாவின் ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது.பாhரியளவிலான கட்டுமாணப் பணிகள் காரணமாக,மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகையையே தமக்கு அனுமதிக்க முடிந்துள்ளதாக ஹஜ் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து இதுவரை 4.2மில்லியன் மக்கள் உம்ரா கிரிகைகளுக்காக சவூதிஅரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 3.9மில்லியன் பேர் நாடு திரும்பியுள்ளதுடன்,இன்னும் 250,000பேர் சவூதியில் தங்கியுள்ளனர்.நடவடிக்கைகளை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு ஹஜ் அமைச்சின் ஊடாக,48உம்ரா இயக்குணர்கள் இணைந்து 300குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை,ஹஜ் கடமைக்காக வரும் சவூதிஅரேபிய யாத்திரீகர்களின் எண்ணிக்கையை 50சதவீதத்திலிருந்து 30சதவீதத்துக்கு குறைக்கவுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments