பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி சேவை ரமழான் காலத்தில் அதானை ஒளிபரப்பவுள்ளது.




பிரத்தானியாவின் முக்கிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சனல்4 தொலைக்காட்சி சேவையானது எதிர்வரும் ரமழான் மாதத்தில் ஐங்காலத் தொழுகைக்கான அதானை நேரடியாக ஒளிபரப்புச்செய்யவுள்ளது.ஜூலை 9ஆம் திகதி செய்வாய்க்கிழமை, அதாவது ரமழான் முதல்நாள் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரையுள்ள நாட்களில்  அதிகாலை 3மணிமுதல் ஒவ்வொருநாளும் 3நிமிடங்கள் கொண்ட அதான் ஒளிபரப்பப்படவுள்ளது. தொழுகை நேரத்தை ஞாபகப்படுத்தும் நோக்கில்,ரமழான் முதல்நாளன்று வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தி 4தடவைகள் 20செக்கன்கள் கொண்ட படம் ஒன்று ஒளிபரப்பப்படவுள்ளது.அதிகாலத் தொழுகைக்கான அதான் சனல்4 வழமையான தொலைக்காட்சி சேவையிலும்,அடுத்த நான்கு நேரத் தொழுகைக்கான அதான் சனல்4 இணையச் சேவையிலும் ஒளிபரப்பப்படவுள்ளது. அதானைக் கேட்கும் முஸ்லிம்களுக்கு சரியான நேரத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியுமாகவுள்ளதுடன், அடுத்தவர்களுக்கு அதான் நகழ்ச்சி ஒளிபரப்படுவதை தெரியப்படுத்துவார்கள் என தாம் நம்புவதாக சனல்4 தொலைக்காட்சி சேவையின் உண்மைசார் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் ரைப் லீ தெரிவித்துள்ளளார்.சனல்4 தெலைக்காட்சி சேவையின் நகர்வுக்கு பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்ஸில் ஆதரவளித்துள்ளது. பிரித்தானியாவின் ஏறத்தாள 3மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது பிரித்தானியாவின் மொத்த சனத்தொகையில் 5சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments