பிரித்தானியின் தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் இஸ்லாமியவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றைக் கொண்டதொகுதியொன்று சேர்க்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கல்வி அமைச்சின் செயலாளர் மிச்சல் கோவ் தெரிவித்துள்ளார்.பாடசாலை புதிய பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் பெரும்பாலான ஆசிரியர்கள்  அதிருப்தியை வெளியிட்டதை அடுத்தே புதிய பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாறு,பண்டை சீனா வரலாறு போன்ற பாடங்கள் சேரக்கப்பட்டுள்ளன.ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்ஸில் ,இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை எனக்கூறி தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது.500 இஸ்லாமிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸில் ஆரம்ப வரைவை எதிர்த்து,பிரித்தானியாவின் எல்லா பாடசாலை மாணவர்கள் மீதும் கவனமெடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் கல்வி அமைச்சுக்கு அழைப்புவிடுத்தது. இதன்விளைவாக, பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமரூனினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.புதிய பாடத்திட்டம் 2014ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் அரசபாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments