கேம்பிரிஜ் பல்கலைக்கழக பள்ளிவாசல் ஐரோப்பாவின் முதலாவது பசுமைப் பள்ளிவாசலாக அமையவுள்ளது.


இங்கிலாந்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாயந்த கேம்பிரிட்ஜ் புறநகரில் அமைந்திருக்கும் உலகப்புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பசுமைப் பள்ளிவாசல் ஒன்று அமையப் பெறவுள்ளது. புதிதாக வடிவமைக்கபடவுள்ள கேம்பிரிஜ் பள்ளிவாசலில் பசுமை தொடர்பான சிக்கல்கள் மிகுஉயர்ந்த அளவில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. இஸ்லாமிய நாகரிகமானது வீண்விரயத்தை நிரகாகரித்து இறைவனின் கண்காணிப்பில்அருள் செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், புதிய கேம்பிரிஜ் பள்ளிவாசல் கட்டுமாணப்பணிகளில் இவ்விடயம் அமையவுள்ளதுஎன கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் கல்விசார் நம்பிகை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அப்துல் ஹக்கீம் முராத்(டிரிம் வின்டர்) தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலானது பெரிய ஒருங்கிணைந்த ஸ்கைலைட் மூலம் இயற்கையான முறையில் ஒளியூட்டப்படவுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக தரைவெப்ப மூலக்குழாய்களைப் பயன்படுத்தி செயல்திறன்மிக்க சக்தியுடன் குளிர் மற்றும் சூடான சூழல்கள் ஏற்படுத்தபடவுள்ளது.பாதுகாப்பான நவீன தொழிநுட்பம் மற்றும் பச்சைக்கூரை என்பனபயன்படுத்தப்படவுள்ளதால் சூழலலுக்கு ஏறத்தாள பூச்சியசதவீத காபன் அளவேவெளியிடப்படும்  என கலாநிதி ஹக்கீம் முராத் தெரிவித்துள்ளார்.பச்சை சூழலைஉருவாக்கும் நோக்கில் பள்ளிவாசலை சுற்றி மேலதிக நடப்பட்ட 20சைப்ரஸ் மரங்கள்  பள்ளிவாசலை சுற்றியுள்ள தோட்டத்தில் இணைக்கப்படவுள்ளது.புதிய கேம்ரிஜ் பள்ளிவாசலானது ஐரோப்பாவின் முதலாவது பசுமைப் பள்ளிவாசலாகவும் மற்றும் கேம்ரிஜ் நகரம் மற்றும் குடியிருப்புகளில் ஓர் அடையாளக் கட்டிடமாகவும் அமையவுள்ளது.


Post a Comment

0 Comments