பேஸ்புக் சமூக இணையதளம் இஸ்லாமிய ஹிஜ்ரி நாற்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.



உலகின் மிகப்பிரசித்தி பெற்ற சமூக இணையதளமான பேஸ்புக் இணையதளம் அதன் பிறந்தநாள் பகுதியின் புதிய அம்சமாக இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை திறந்துள்ளது.ஹிஜ்ரி நாற்காட்டியானது ஜோர்ஜியன் நாட்காட்டியுடன் இணைந்த ஓர் விருப்பத்தேர்வாக காணப்படவுள்ளது.  ஹிஜ்ரி நாற்காட்டியானது 12சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதுடன்,அது ஜோர்ஜியன் வருடத்தை விட 11நாட்கள் குறைந்தது.பேஸ்புக்கின் ஹிஜ்ரி நாட்காட்டி சேவையானது முதலவதாக சவூதிஅரேபியாவுக்கு வழங்கப்ப்டவுள்ளதுடன் , பின்னர் இஸ்லாமிய சனத்தொகையின் அடிப்படையில் ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

புதிய சேவையானது சவூதிஅரேபியா பாவனையாளர்களுக்கு அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இலகுவான முறையில் தொடர்பாடலை மேற்கொள்ள வழிவகுக்கும் என பேஸ்புக்கின் மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்கா பிராந்தியத்தலைவர் ஜோனேதன் லபின் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியாவின் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விருப்பத்தேர்வாக ஹிஜ்ரி நாட்காட்டி பற்றி பேஸ்புக்கால் அறிவிக்கப்படவுள்ளதுடன், பயனர் பக்கத்தின்  பகுதியில் பிறந்தநாளை குறிப்பிடுவதற்கு ஹிஜ்ரி நாற்காட்டியை பயன்படுத்த முடியும்.புதிய அம்சமான ஹிஜ்ரி நாற்காட்டியானது எதிர்வரும் வார,மாதங்களில் சிறந்த உத்வேகத்தை அளிக்கும் என தாம் நம்புவதாகவும், முதலாவதாக இச்சேவை சவூதி அரேபியாவில்  பரீட்சிக்கப்படவுள்ளதுடன் பாவனையாளர்களின் பதிலைப் பொறுத்து ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என ஜோனேதன் லபின் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் 1.1பில்லியன் பேஸ்புக் பயனர்கள் காணப்படுவதுடன், பேஸ்புக் பயனர்களின் அதிகரிப்பைத் தொடந்து கடந்த வருடம் மத்தியகிழக்கு,ஆபிரிக்கா பிராந்தியங்களின் நடவடிக்கைகளை கண்கானிப்தற்காக பேஸ்புக்கின் பிராந்தியக்கிளை ஒன்று துபாயில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments