பிரித்தானியாவில் உயர்ந்தளவில் முஸ்லிம்கள் தருமம் செய்கின்றனர்.



பிரித்தானியவின் வேறு மதத்தவர்களுடன் ஒப்பிடும் போது அதிகளவில் தர்மம் செய்வர்களாக முஸ்லிம்கள் காணப்படுவதாக முன்னணி அறக்கட்டளை நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் கணிப்பீடுகள் சுட்டிகாட்டியுள்ளன. பிரித்தானியாவின் "ஜஸ்ட கிவிங்" எனும் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் 4000பேரிடையே மேற்படி கருத்துக்கணிப்பை மேற்கொண்டது,இவர்களில்முஸ்லிம்களே அதிகமான அளவில் தருமம் செய்ததாக அவ்அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.மேற்படி ஆய்வின் முடிவுகள் பிரித்தானிய ஊடக இணைய தளமொன்றில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்ற வருடம் சராசரியாக  முஸ்லிம்கள் குறித்த ஒவ்வொருவருக்கும் 371ஸ்ரெலிங் பவுண்களை தருமம் செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சராசரியாக யூதர்கள் குறித்த ஒவ்வொருவருக்கும் 270ஸ்ரெலிங் பவுண்களை தருமம் செய்துள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்களிடையே இத்தொகை 178ஸ்ரெலிங் பவுண்களை விட சற்று அதிகமாகவும்,கிறிஸ்தவர்களிடையே 178ஸ்ரெலிங் பவுண்களை விட குறைவாகவும் மற்றும் புரட்டஸ்தாந்தினரிடையே இத்தொகை 202ஸ்ரெலிங் பவுண்களாகவும் காணப்பட்டது.மேலும்,10 நாஸ்திகர்களில் 4பேர் சரியான முறையில் தருமம் செய்யாது இருந்ததுடன்,இது முஸ்லிம்களில் 10இல் 3பேராகவும்,கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறிஸ்தவர்களிடையே 10இல் 3பேராகவும்,யூதர்களிடையே 10இல் 4பேருக்கு அதிகமாகவும் காணப்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.இணையத்தளத்தின் ஊடாக தருமம் செய்யும் முஸ்லிம்களின் அளவு அதிகரித்து வருவதாக மேற்படி ஆய்வை மேற்கொண்ட "ஜஸ்ட கிவிங்" அறக்கட்டளை நிறுவனம் தெரிவிக்கின்றது. அதிகமான முஸ்லிம்களின் நன்கொடைகள் 'இஸ்லாமிக் ரிலீப்' மற்றும் 'முஸ்லிம் ஐட்' போன்ற அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் ஏறத்தாள 2.7மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments