ஹஜ்,உம்ரா கிரியைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் ஸ்மார்ட் போன் அப்ஸ்(App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



துபாயை தளமாகக்கொண்ட ஹஜ்நெட் எனும் நிறுவனம், ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் "உம்ராஸலாம்" என்ற ஸ்மார்ட் போன் அப்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.உம்ராஸலாம் அப்ஸ்ஸானது  ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளின் போது குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் செய்ய வேண்டிய செயற்பாடுகளை,மார்க்க கடமைகளை சரியான முறையில் விளக்குவதாக ஹஜ்நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உதரணமாக, இந்த அப்ஸ்ஸானது குறித்த நேரத்தில் குறித்த  இடத்தில் மேற்கொள்ளவேண்டிய தொழுகைகளை பற்றி வாசிப்பதன் அல்லது கேட்கச் செய்வதன்மூலம் தெரியப்படுத்துகின்றது. மேலும், யாத்திரிகர் எத்தனை தடவை புனித கஹ்பாவை சுற்றியிருக்கிறார் (தவாப்) என்பதை கணக்கிடுகின்றதுடன்  ஏழு தவாப்களும் நிறைவடைந்ததும் செய்தியொன்றின் மூலம் தெரியப்படுத்துகின்றது.இந்த அப்ஸ்ஸானது ஏனையவற்றை பார்க்கிலும் மிகக்கூடுதலான அளவில் யாத்திரீகர்களுக்கு தகவல்களை வழங்கக்கூடியது என உம்ராஸலாம் அப்ஸ்ஸின் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.உம்ராஸலாம் அப்ஸ்ஸை ஐ-போன் மற்றும் அன்ரோய்ட் ஸ்மார்ட் போன்களுக்கு காலவரையறையுள்ள இலவச டவுன்லோட் செய்யமுடியும்.தற்போது இந்த அப்ஸ்ஸானது ஆங்கிலத்தில் மாத்திரம் பாவனையில் உள்ளதுடன்,அரபு மொழியிலான அப்ஸ்ஸானது இன்னும் சிறிது காலத்தில் வெளியிடப்படவுள்ளது.

Post a Comment

1 Comments

  1. @ இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம்.
    ஜஸாகல்லாஹு ஹைரா.

    ReplyDelete