இங்கிலாந்து மற்றும் வோல்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்துவருகின்றது.







கடந்த பத்துவருடங்களில் இங்கிலாந்து மற்றும் வோல்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை 75சதவீத்தால் அதிகரித்துள்ளது.அதிமான சிறுவர்களும்,குறைந்தளவான முதியோர்களும் முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என அண்மையில் வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து மற்றும் வோல்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை கடந்த பத்துவருடங்களில் இரு மடங்கினால் அதிகரித்துள்ளது என சனத்;தெகை புள்ளிவிபரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸில் குழுவொன்றினால் இச்சனத்தொகை மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.தரவுகளின் படி,3முஸ்லிம்களின் ஒருவர் 15வயதுக்கு குறைந்தவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.16சதவீத மொத்த சனத்தொகையில், 65வயதுக்கு மேற்பட்டோர் 4சதவீதமாக காணப்படுகின்றனர்.குறித்த சனத்தொகை ஆய்வறிக்கை பிரித்தானிய பாரளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் தீர்க்கமான பங்கை வகிக்கும் என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-WNB-

Post a Comment

0 Comments