நுழைவதற்கு தற்காலிமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக 14நாட்கள் சவூதி அரேபியாவில் தங்கியுள்ள, கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படாத ஜீசிசி நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மேற்படி தடையிலிருந்து விலக்களிக்கப்படுவதோடு, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் இணையதளத்தின் ஊடாக புனித நகரங்களுக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் பணிப்புரையின் பேரில் உள்நாட்டில் மற்றும் சர்வதேச ரீதியாகவும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவே இந்த முடிவு,எடுக்கப்பட்டுள்ளதுடன், புனித ஹரம் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவால்களுக்கு வருகின்ற யாத்திரீகர்களின் ஆரோக்கியம் தொடர்பில் மிகக்கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments