சவூதி அரேபியா 10மில்லியன் மரங்களை நடும் பசுமைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது


சவூதி அரேபியாவில் பாலைவன நிலங்களை குறைக்கும் நோக்கில் பத்து மில்லியன் மரங்களை நடும் பசுமைத் திட்டம்ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 2021 ஏப்ரல் மாதம் ஆகும் போது மேற்படி 10மில்லியன் மரங்கள்நடப்படவுள்ளதாக சவூதி அரேபியாவின் சுற்றுச் சூழல் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல்-பத்லி குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் நாங்கள் பசுமையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,சவூதி அரேபியாவின் சுற்றுச் சூழல் அமைச்சு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,ஒக்டோபர் 10ஆம் திகதியன்று அதன் அங்குரார்ப்பான நிகழ்வினை பிரசுரித்துள்ளது.

சவூதி அரேபியாவின் நோக்கு 2030 என்ற திட்டத்தின் கீழ்நிலையான சுற்றுச் சூழல் சமநிலையை உருவாக்கும் நோக்கிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிலைபேறான அபிவிருத்தி திட்டத்திற்கும் அமைவாக பசுமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments