இந்தோனேசியாவின் மேற்கு சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை காலை (15/01/2021)ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6.2 மக்னிடியூட் அளவில் பதிவுசெய்யப்பட்ட நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதுடன், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 2018ஆம் சுலாவெசி தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்தத்தினால் 20,000இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments