சவூதி அரேபியாவில் பெண் நீதிபதிகள் நியமனம்

 


சவூதி அரேபியாவில் விரைவில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் பெண்கள் வழுவூட்டல் பிரிவின் அதிகாரி ஹின்ந் அல்-ஸாஹித் அவர்கள் வெள்ளிக்கழமையன்று அறிவித்தார். அண்மையில் நீதி அமைச்சர் வலீத் அல்-ஸல்மானி அவர்களால் சட்ட அலுவலர்களாக 100 பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

சட்டம்,ஷரீயா,சமூகவியல்,நிர்வாகம் மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய துறைகளில் தேர்ச்சிபெற்ற பல பெண்களுக்கு நீதி அமைச்சினால் அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் பெண்களின் தரத்தை மேம்படுத்தும் மற்றும் வழுவூட்டும் பொருட்டு சட்டத் துறையில் பெண்களை இணைத்துக்கொள்வது பற்றி நீதி அமைச்சு ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments