அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலின் (NSC) புலனாய்வு நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளராக பலஸ்தீன-அமெரிக்கரான மாஹிர் பிட்டர் அவர்கள் ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் காங்கிரஸின் (பாராளுமன்றம்) புலனாய்வுக் குழுவில் ஜனநாயகக் கட்சியினது பொது ஆலோசகராக பிட்டர் அவர்கள் பணியாற்றியதோடு, ட்ரம்ப் அரசாங்கத்தின் முதற்பகுதியின்போது பெரும் பங்காற்றிய ஒருவராகவும் அறியப்படுகின்றார்.
அமெரிக்காவின் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியானமாஹிர் பிட்டர் அவர்கள், ஜனாதிபதி ஒபாமா அரசாங்கத்தின் போது தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு-பலஸ்தீன விவகார பணிப்பாளராக கடமையாற்றினார். மேலும், இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அகதிகள் கற்கை நிலையத்தில் கட்டாய இடம்பெயர்வு தொடர்பான முதுமாணிப்பட்டத்தை பூர்த்தி செய்த இவர், ஜெரூஸத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீனுக்கான உதவி வழங்கும் ஆணையகத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments