ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை பெறும் வாய்ப்பு

 


வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், வைத்தியர்கள்,விஞ்ஞானிகள், களைஞர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியுரிமைச் சட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இந்த அறிவிப்பு சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. மிகத் திறமையுள்ளவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் குடியுரிமை வழங்குவதன் மூலம் நாட்டின் சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், தேசிய ரீதியில் ஒட்டுமொத்த அபிவிருத்தி செயல்முறையை அதிகப்படுத்தவும் எதிர்பார்ப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி செய்க் கலீபா பின் ஸைத் அல்-நஹ்யான் அவர்களின் வழிகாட்டலின் பேரில், உப ஜனாதிபதியும் பிரதமருமான செய்க் முஹம்மத் பின் ராஷித் அல்-மக்துாம் அவர்களால் இப்புதிய சட்டம் சனிக்கழமையன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 



Post a Comment

0 Comments