பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொவிட் 19 எதிர்ப்பு தடுப்பூசியான அஸ்ட்ராஸினேகாவினை சிறுவர்களுக்கு மீது தடைவயாக பரிசோதிக்கவுள்ளது. இதன் மூலம் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் பிரதிபலிப்பு என்பவற்றை ஆய்வுக்கு உட்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.இப்புதிய இடைநிலைக் கட்ட சோதனையின் மூலம் 6 முதல் 17வயது வரையான சிறுவர்கள் மீது தடுப்பூசி எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது கண்காணிக்கப்படவுள்ளது.
முதல் கட்ட சோதனைக்காக வேண்டி 300 தொண்டர்கள் இணைத்துக்கொள்ளப்டவுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏனைய கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளை விடவும் விலை குறைந்ததும், இலகுவானதும் என்ற காரணத்தினால் 'உலகிற்கான தடுப்பூசி' என்ற நாமத்தைஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸினேகா பெற்றுள்ளது. இவ் வருடம் ஏறத்தாள 3 பில்லியன் அஸ்ட்ராஸினேகா தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன்,எப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 200 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
0 Comments