கடுமையான குளிர்காலங்களில் வீடில்லாதோர், இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்காக வேண்டி பிரான்ஸ் பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளது

பிரான்ஸின் பள்ளிவாசலொன்றில் கடுமையான குளிர்காலங்களின் போது வீடில்லாதவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில் தலைநகர் பரிஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மன்டஸ் ஸுத் பள்ளிவாசலிலேயே மேற்படி வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசலில் வீடில்லாதோர், இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்காக வேண்டி கட்டில்கள் போடப்பட்டுள்ளதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இப்பள்ளிவாசலில் வருடம் முழுதும் அவசர நிலையின் போது தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, முஸ்லிம்களுக்கு மாத்திரம் இன்றி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் தங்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் அப்துல் அஸீஸ் அல்-ஜஹூரி தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments