வட்ஸ்அப் அப்ளிகேசனில் புதிதாக கொண்டுவரப்பட்ட தனியுரிமை கொள்கையினைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆகக்கூடுதலாக பதிவிறக்கம் செய்யபட்ட விளையாட்டல்லாத மொபைல் அப்ளிகேசனாக டெலிகிராம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் உலகலாவிய ரீதியில் 63மில்லியனுக்கும் அதிகமாக டெலிகிராம் அப்ளிகேசன்கள் இன்ஸ்டோல் செய்யப்பட்டதாக சென்ஸர் டவர் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் மூலம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் உலக நாடுகள் இடையில் ஆகக்கூடுதலான டெலிகிராம் அப்ளிகேசன்களை இன்ஸ்டோல் செய்த நாடுகளில் முதலாவதாக இந்தியாவும், இரண்டாவதாக இந்தோனேசியாவியும் காணப்படுகின்றது.
0 Comments