இத்தாலி நகரங்களில் அமைந்துள்ள பள்ளிவாசல்களை கொரோனா தடுப்பூசியேற்றும் நிலையங்களாக பயன்படுத்த தயார் என பள்ளிவாசல்கள் இமாம்கள் அறிவிப்பு

இத்தாலியின் நகரங்களில் அமைந்துள்ள பள்ளிவாசல்களை கொவிட் 19 தடுப்பூசியேற்றும் நிலையங்களாக பயன்படுத்துவதற்காக வழங்குவதற்கு தாம் தயார் என இத்தாலி நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களின் இமாம்கள் அறிவித்துள்ளனர். நாட்டில் புதிய கொரோனா வைரஸின் பரம்பல் மோசமடைந்துள்ள நிலையில் மேற்படி பள்ளிவாசல் இமாம்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிவாசல்களை கொவிட் 19 எதிர்ப்பு தடுப்பூசியேற்றும் நிலையங்களாக பயன்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பமானது இனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பையும், நட்புறவையும் ஏற்படுத்தும் என மிலான் நகரில் அமைந்துள்ள ரோம் பெரிய பள்ளிவாசலின் இமாம் யஹ்யா பல்லவிகினி அவர்கள் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் புதிய கொரோனா தொற்று தாக்கிய முதலாவது நாடாக இத்தாலி காணப்படுவதோடு, கொவிட் 19 தொற்றுக் காரணமாக இத்தாலியில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments