உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு செயற்கை கோள்களை சவூதி அரேபியா விண்ணுக்கு ஏவவுள்ளது


சவூதி அரேபியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்கள் சனிக்கிழமை காலை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சவூதி அரேபியாவின் விஞ்ஞான தொழிநுட்பத்திற்கான மன்னர் அப்துல் அஸீஸ் நகரம் மற்றும் மன்னர் ஸவ்த் பல்கலைக்கழகம் என்பவற்றுக்காகவே மேற்படி செயற்கைக் கோள்கள் ஏவப்படவுள்ளன. விஞ்ஞான தொழிநுட்பத்திற்கான மன்னர் அப்துல் அஸீஸ் நகரத்திற்காக உருவாக்கப்பட்ட சஹீன் ஸட் செயற்கைக் கோளானது கதகஸ்தானில் ஏவப்படவுள்ளதோடு, படப்பிடிப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி போன்றதேவைகளுக்காக வேண்டி இது பயன்படுத்தப்படவுள்ளது. மன்னர் ஸவ்த் பல்கலைக்கழகத்துக்கு என உருவாக்கப்ட்ட கியூப் ஸட் செயற்கைக் கோளானது கற்றல் ஆராய்ச்சிதேவைகளுக்காக வேண்டி விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. இதன் மூலம் சவூதிஅரேபியாவில் செயற்கைக் கோளை விண்ணுக்கு ஏவிய  முதலாவது பல்கலைக்கழகமாக, மன்னர் ஸவ்த் பல்கலைக்கழகம் பெயரைப் பெறவுள்ளது.

Post a Comment

0 Comments