ரமழான் மாதத்தில் உம்ரா செய்வதற்கு கொரோனா தடுப்பூசியேற்றல் அவசியமில்லை

 


இவ்வரும் புனித ரமழான் மாதத்தில் உம்ரா கிரியையை மேற்கொள்ளவுள்ளவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியேற்றல் அவசியமில்லை என சவூதி அரேபியாவின் ஹஜ் ,உம்ரா அமைச்சு அறிவித்துள்ளது. டுவிட்டர் சமூக ஊடகத்தில் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியேற்றல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இவ்வருடம் புனித ரமழான் மாதத்தில் உம்ரா கிரியையை மேற்கொள்ள தடுப்பூசியேற்றல் அவசியமில்லை என சவூதி அரேபியாவின் ஹஜ் உ்மரா அமைச்சின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் டுவிட்டர் கணக்கில் பதிலளிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளுடன் தொடர்பான வேலைகளில் ஈடுபடுகின்ற வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்கள் அவர்களுடைய அனைத்து ஊழியர்களுக்கும்,ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ரமழானுக்கு முன்னர் கட்டாயம் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியேற்றல் வேண்டும் என ஹஜ் ,உம்ரா அமைச்சு இவ்வார ஆரம்பத்தில் வெளியிட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும், தடுப்பூசியேற்றப்படாத ஊழியர்கள் ஏழு நாட்களுக்கு ஒரு முறை நெகடிவ் பீ.சீ.ஆர். பரிசோதனை பெறுபேற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவளை, புனித ரமழான் மாதத்தில் ஒன்றுகூடும் இடங்களில் சமூக இடைவெளி சரியான முறையில் பேணப்படுகின்றதா என்பது தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் என நகர,கிராம விவகாரங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வழிபாட்டாளர்கள் மத்தியில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் வெவ்வேறு பகுதிகளில் 11 பள்ளிவாசல்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Post a Comment

0 Comments