ரமழான் மாதத்தில் புனித மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்குச் செல்ல சிறுவர்களுக்கு அனுமதி மறுப்பு

 


புனித ரமழான் மாதத்தில் 15வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் நபிகள் நாயகம் அவர்களின் பள்ளிவாசலுக்கும் மற்றும் அதன் வளாகத்தினுள்ளும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பள்ளிவாசலின் பொது தலைமையகம் அறிவித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வருட ரமழானின் போது புனித மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையின் நேரத்தை அரைவாசியால் சுருக்கவுள்ளதோடு, தராவீஹ் தொழுகையின் 30 நிமிடங்களின் பின்னர் பள்ளிவாசல் மூடப்படவுள்ளது. மேலும், தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் பள்ளிவாசலில் இஹ்திகாப் இருப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின்மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் விவகாரங்களுக்கான பொது தலைமையகம் அறிவித்துள்ளது. அத்துடன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பதற்காக விரும்புவர்களுக்கு தண்ணீரும், பேரீத்தம் பழமும் சொந்தப் பாவனைக்காக மாத்திரம் வழங்கப்படவுள்ளதோடு, அவற்றை அடுத்தவர்களுடன் பகிரந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் வளாகத்தில் ஸஹர் உணவுகளை வழங்குவதற்கும், ஸஹர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் இருந்து தாம் வெளியேற வேண்டிய இடங்களைஅறிந்துகொள்வதற்காக தேசிய வாகன நிறுத்தல் மொபைல் அப்பான 'மப்கிப்' அப்பை பயன்படுத்துவது அவசியமாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.








Post a Comment

0 Comments