பிரித்தானிய வரலாற்றில் பலஸ்தீனுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் பேரணி

 

காஸாவில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலஸ்தீனுக்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை லண்டன் நகரில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியெரான்று நடைபெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் பலஸ்தீனுக்கு ஆதராவாக நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பேரணியாக இது கருதப்படுகின்றது. கடுமையான மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய லண்டன் நகரில் பலஸ்தீனக் கொடியை ஏந்திய வண்ணம், காஸா மற்றும் ஏனைய பகுதிகளின் மீது இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனின் மேட்டுக் கரைப்பகுதியில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், 'சுதந்திர பலஸ்தீன்' என்ற கோசங்களோடு பாராளுமன்ற கட்டடத் தொகுதியை ஊடறுத்து ஒக்ஸ்போட் வீதியினுடாகச் சென்றனர். மேலும், இஸ்ரேலின் குடியேற்றத்தை முற்றாக நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பலஸ்தீன ஒற்றுமைக்கான பிரச்சார இயக்கம் மற்றும் அல்-அக்ஸா நண்பர்கள் உட்பட ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி மேற்படி ஆர்ப்பாட்டத்தில் 180,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரிமிங்ஹம், லிவர்பூல்,பிரிஸ்டல்,பீடபேர்க் மற்றும் நொட்டிங்ஹம் போன்ற நகரங்களிலும் பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Post a Comment

0 Comments