இம்முறை ஹஜ் கடமைக்கு பெண்களுக்கு மஹ்ரம் இல்லாமல் பங்கேற்க அனுமதி

இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காக வேண்டி 450,000இற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக சவூதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு தெரிவிக்கின்றது. ஹஜ் கடமைக்காக வேண்டி இணையத்தில் பதிவுசெய்வதற்காக திறக்கப்பட்ட 24 மணித்தியாலத்திற்குள் 450,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக மேற்படி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பத்தாரிகளில் 60 சதவீதமான ஆண்களும், 40சதவீதமான பெண்களும் அடங்குகின்றனர். இவ்வருடம் ஹஜ் கடமைக்கு முதல்முறையாக  ஆண் துணையில்லாமல் பெண்கள் தம்மை பதிவுசெய்யவதற்கு சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, இவ்வருடம் ஹஜ் கடமைக்கு 60,000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments