கொரோனா தடுப்பூசி ஏற்றாதவர்களை சிறையில் அடைக்கவுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு

 


பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி ஏற்றாதவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பவுள்ளதாக பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ரோட்ரிகோ துர்ததே எச்சரித்துள்ளார். பிலிப்பைன்ஸில் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதை அடுத்தே மேற்படி ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பமானதுடன், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசியேற்றும் நிகழ்வுகளில் குறைந்தளவான மக்களே கலந்துகொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


பிலிப்பைன்ஸின் சனத்தொகை 110 மில்லியன் ஆகக் காணப்படுவதோடு, நேற்று திங்கட்கிழமை வரையில் மொத்த சனத்தொகையில் 1.95 சதவீதமான மக்கள் மாத்திரமே கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments