பிலிப்பைன்ஸ் வரலாற்றின் முதலாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை பளுதுாக்கும் வீராங்கனை பெற்றுள்ளார்

 

பிலிப்பைன்ஸ் வரலாற்றில் முதலாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியின் பெண்களின் 55கிலோகிராம் வகுப்பிற்கான பளுதுாக்கும் போட்டியில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஹிதியன் டயஸ் என்ற வீராங்கனையே மேற்படி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். பிலிப்பைன்ஸ் சார்பாக தங்கப்பதக்கத்தை வென்ற ஹிதியன் டயன்ஸை, அந்நாட்டின் ஜனாதிபதி பேச்சாளர் உட்பட பலர் பராட்டியுள்ளார்கள். 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான பளுதுாக்கும் போட்டியில் ஹிதியன் டயஸ் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments