2021ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக கட்டார் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தெரிவு

உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளை தரப்படுத்தும் ஸ்கை ட்ரக் (Skytrax) நிறுவனம் 2021ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2021ஆம் ஆண்டின் மிகச்சிறந்த விமான நிலையமாக கட்டாரின் டோஹா நகரில் அமைந்துள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையம், 2020ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தலின் போது மூன்றாம் இடத்தைப் பெற்றது. கடந்த வருடம் மிகச்சிறந்த விமானநிலையமாக தெரிவுசெய்யப்பட்ட சிங்கப்பூர் சங்கி சர்வதேச விமானநிலையம், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேவளை, 2021ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த விமான சேவை நிறுவனமாக கட்டார் எயார்வேஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் கட்டார் அரசாங்கம் ஹமாத் சர்வதேச விமான நிலையம் மற்றும்  கட்டார் எயார்வேஸ் நிறுவனம் போன்றவற்றுக்கு அதிகமான முதலீடுகளை செய்திருந்தது. அதன் பலனாகவே இந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் எயார்வேஸ் உடன் பயணம் செய்வதற்கு ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பிரயாணிகள் இலவச நகர் பிரயாணம், இலவச தங்குமிடம் மற்றும் இலவச விஐபி  பரிமாற்ற சேவைகள் போன்ற பல சலுகைகளை அனுபவிக்க முடியும். 

2021ஆம் ஆண்டிற்கான முதல் 10 மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

1. ஹமாத் சர்வதேச விமான நிலையம், கட்டார்

2. டோக்கியோ ஹனேடா விமான நிலையம், ஜப்பான்

3. சிங்கப்பூர் சங்கி சர்வதேச விமான நிலையம்

4. இன்சியோன் விமான நிலையம், தென்கொரியா

5. டோக்கியோ நரிடா விமான நிலையம், ஜப்பான்

6. மூனிச் விமான நிலையம், ஜெர்மன்

7. ஸூரிச் விமான நிலையம், சுவிசர்லாந்து

8. லண்டன் ஹீத்ரோ விமான நிலையம், ஐக்கிய இராச்சியம்

9. கன்ஸய் சர்வதேச விமான நிலையம், ஜப்பான்

10. ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம் 


Post a Comment

0 Comments