85 ஆவது வயதில் பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொண்ட பலஸ்தீன மூதாட்டி

 


பலஸ்தீனைச் சேர்ந்த 85 வயதுடைய ஜிஹாத் புட்டு என்ற மூதாட்டி தனது 85ஆவது வயதில் பல்கலைக்கழத்தில் இஸ்லாமியக் கற்கைத்துறையில் கலைமாணி (B.A.) பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.  1948ஆம் ஆண்டு பலஸ்தீனர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நக்பா நிகழ்வின் போது தரம் 5இல் கற்றுக்கொண்டிருந்த ஜிஹாத் புட்டு அவர்களுக்கு தனது கல்வி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், அவர் 70வயதை தாண்டிய பின்னர் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்ததோடு, தனது 85ஆவது வயதில் பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொண்டார். இஸ்ரேலின் ஸியோனிச அரசாங்கத்தின் கொடுபிடிகளுக்கு மத்தியிலும் ஜிஹாத் புட்டு பட்டத்தைப் பெற்றுள்ள நிலையில், இவ்வாறான நெருக்கடிகள் இல்லாமல் இருப்பின் எவ்வாறான விடயங்களை செய்யமுடியும் என்பது பற்றி சமூக ஊடக ஆர்வலர்கள் சிலாகித்துப் பேசியுள்ளனர். 

Post a Comment

0 Comments