உம்ரா கடமைக்கு ஒரு நாளில்அனுமதிக்கப்படும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக அதிகரிப்பு


நாளந்தம் உம்ரா கடமைக்காக வேண்டி அனுமதிக்கப்படும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறிவித்துள்ளது. அதேவளை,புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் நாளாந்தம் ஐவேளை தொழுகைக்காக வேண்டி 60,000 பேரை அனுமதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

70வயதிற்கு மேற்பட்ட உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்றஅனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றுள்ள 12வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்உம்ரா செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

உம்ரா கடமைகளுக்காகவும் மற்றும் ஹரம் பள்ளிவாசலில் ஐவேளை தொழுகைக்காகவேண்டியும் தம்மை பதிவுசெய்துகொள்வதற்காக Eatmarna மற்றும் Tawakkalna போன்ற மொபைல் அப்களை பயன்படுத்த முடியும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments