இஸ்ரேல் இனவாத அரசாகும் எனும் பிரேரணைக்கு ஆதவராக ஐக்கிய இராச்சியத்தின் தொழிலாளர் கட்சி வாக்களிப்பு

இஸ்ரேல் இனவெறியைத் துாண்டும் நாடாகும் என்ற பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் தொழிலாளர் கட்சி வாக்களித்துள்ளது. ஐரோப்பாவில் மிகப் பெரிய அரசியல் கட்சியொன்று இஸ்ரேலுக்கு எதிராக இவ்வாறான ஒரு முடிவை எடுத்துள்ளது இதுவே முதல் தடவையாகும். தொழிலாளர் கட்சி ஆதரவாக வாக்களித்துள்ள பிரேரணையானது, இஸ்ரேலுடன் ஆயுத கொடுக்கல் வாங்கலை நிறுத்தல் மற்றும் இஸ்ரேலின் சட்டரீதியற்ற குடியிருப்புக்களுடன் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது. 

பலஸ்தீன் மக்களை சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றல், அல்-அக்ஸா பள்ளிவாசலில் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல், செய்க் ஜர்ரா பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றல் மற்றும் காஸா பிராந்தியத்தின் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதல் என்பவற்றை கண்டிப்பதாக தொழிலாளர் கட்சி தனது பிரேரணையில் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்கானிப்பகத்தின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி மேற்படி பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments