நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கேலிச்சித்திரத்தை வரைந்த சுவீடன் நாட்டவர் வாகன விபத்தில் பலி

 


நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கேலிச்சித்திரத்தை வரைந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க் எனும் கேலிச்சித்திரக் கலைஞர் பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கும் நிலையில் வாகன விபத்தொன்றில் பலியாகியுள்ளார். இவர் சுவீடன் பொலீஸின் வாகனம் ஒன்றில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரில் வந்த ட்ரக் வண்டியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கொல்லப்பட்டுள்ளார். லார்ஸ் வில்க் உடன் காரில் பயணம் செய்த இரண்டு பொலீஸாரும் மேற்படி விபத்தில் பலியாகி உள்ளனர். ஞாயிற்றுக் கிழமையன்று சுவீடன் தென் பகுதி நகரான மார்க்கரய்டில் இடம்பெற்ற விபத்திலேயே லார்ஸ் வில்க் கொல்லப்பட்டுள்ளார். விபத்தின் போது வாகனம் தீப்பற்றியெறிந்ததாக சம்பவத்தை நேரில்கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

லார்ஸ் வில்க் வரைந்த நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கேலிச்சித்திரமொன்று 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முஸ்லிம்களை புண்படுத்தும் ரீதியாக வரையப்பட்ட கேலிச்சித்திரத்திற்கு எதிராக உலகின் பல நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் குரல் கொடுத்தனர்.  அதவேளை, லார்ஸ் வில்க் கொலை செய்பவர்களுக்கு அல்-குவைதா அமைப்பு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை பரிசாக அறிவித்தது. அதனைனத் தொடர்ந்து சுவீடனுக்கும் இடையான இராஜ தந்திர உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அப்போதைய சுவீடன் பிதமர் பெட்ரிக் ரெய்ன்பெல்ட் 22 முஸ்லிம் நாடுகளின் துாதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 2015ஆம் ஆண்டு கொபன்ஹெகன் நகரில் கூட்டமொன்றில் கலந்துகொள்ள வந்திருந்த லார்ஸ் வில்க் மீது துாப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் அவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments