சுதந்திர பலஸ்தீன்

பலஸ்தீனமும், ஐநா உறுப்புரிமையும்




சதீஷ் கிருஷ்ணபிள்ளை
News Editor SLBC& International analyst 
Sadeesh@email.com




சர்வதேச ராஜதந்திர அரங்கம் விசித்திரமானது. இந்த அரங்கில் பல நாடகங்கள் அரங்கேறும். சில நாடகங்கள் சுவாரஷ்யமானவை. சிலவற்றைப் புரிந்து கொள்வது கடினம். ஏற்கெனவே அரங்கேறிய நாடகங்கள் மீண்டும் புதிய வடிவில் அரங்கேறுவதும் உண்டு. அவை பழையவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு அபார ஞானம் அவசியம்.


தற்போதும் அப்படியானதொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அது பலஸ்தீன மக்கள் பற்றிய நாடகம். அந்த மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறுவது பற்றிய நாடகம். நாடகத்திற்குரிய கதையை யார் எழுதினார்கள் என்பது தெரியவில்லை. மொஹம்மட் அப்பாஸ் பிரதான பாத்திரமேற்று நடிக்கிறார். நாடகத்தின் பெயரை பலஸ்தீன தேசம் என்று வைத்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை.


ஐக்கிய நாடுகள் சபை என்ற உலகப் பொது அமைப்பில் பலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கீகரிப்பதற்கு மொஹம்மட் அப்பாஸ் மேற்கொள்ளும் முயற்சியை நாடகம் சித்தரிக்கிறது. இதில் அமெரிக்காவிற்கு வில்லன் வேடம். இஸ்ரேலுக்கும் தான். அப்பாஸின் முயற்சியை முறியடிப்பது அவற்றின் வேலை.

சரி. நாடகத்தைப் பார்ப்பதற்கு முன்னர் யதார்த்த உலகிற்குள் செல்வோம். பலஸ்தீன மக்கள் நாடற்றவர்கள். இவர்களில் சிலர் மேற்குக் கரையில் வாழ்கிறார்கள். மற்றவர்கள் காஸா நிலப்பரப்பில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டு நிலப்பரப்புக்களும் இஸ்ரேல் என்றழைக்கப்படும் தேசத்தின் இருவேறு பகுதிகளில் உள்ளன. அப்பாஸ் மேற்குக் கரையில் இருக்கிறார். யூதக் குடியிருப்புக்களுக்கு மத்தியில் பலஸ்தீன அதிகாரசபை என்ற அமைப்பின் பெயரால் முதற்தொகுதி பலஸ்தீனர்களை ஆட்சி செய்கிறார். அவர் மேற்குலகின் ஆசியுடன் அரியணை ஏறியவர். மேற்குலகின் சொல்லைக் கேட்டு நல்ல பிள்ளையாக நடந்து கொள்கின்றவர்.

மறுபுறத்தில், யூத ஆட்சியாளர்களால் வேலி போட்டு அடைக்கப்பட்ட காஸா நிலப்பரப்பு. அது ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்குலகைப் பொறுத்தவரையில், ஹமாஸ் இயக்கம் சண்டித்தனம் செய்யும் பிள்ளை. அதன்மீது பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிலப்பரப்புகளுக்கு அப்பால், வேறு நாடுகளில் அகதி வாழ்க்கை வாழும் பலஸ்தீனர்களும் இருக்கிறார்கள்.




தற்போது இஸ்ரேலாக அங்கீகரிக்கப்பட்ட மண் தமது சொந்த தேசம் என்பது பலஸ்தீனர்களின் ஆதங்கம். சொந்த மண்ணில் நாடற்றவர்களாக இருக்கும் தமக்கு சுயநிர்ணய உரிமையுள்ள தேசம் அவசியம் என்பது காலங்காலமாக பலஸ்தீனர்கள் விடுத்து வரும் கோரிக்கை. தேசம் என்றால் எல்லைகள் வேண்டும்.
ஆனால், எல்லைகளை நிர்ணயிப்பதில் பிரச்சனை. இஸ்ரேலிய மண்ணில் இருந்து ஒரு அங்குலத்தையேனும் விட்டுத்தர யூதத் தலைவர்களுக்கு விருப்பமில்லை. இஸ்ரேலியர்களுக்குத் துணை அமெரிக்கா. எந்த வகையிலும் பலஸ்தீன தேசம் உருவாகி விடக் கூடாது என்பதில் அமெரிக்காவிற்கு அதீத அக்கறை. அந்த அக்கறையில் அமெரிக்கா செய்த தகிடுதத்தங்கள் ஏராளம்.

பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை சிதைத்தமை முதற்கொண்டு போராட்டக் குழுக்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியமை வரையிலும், பலஸ்தீனர்களை இனச்சுத்திகரிப்பு செய்ய யூதர்களுக்கு ஆயுதம் வழங்கியமை தொடக்கம் பலஸ்தீனர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப் பாடுபட்டமை வரையிலும் பல தந்திரங்கள். இந்தத் தந்திரங்களை மறைப்பதற்காக அவ்வப்போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் பல வியூகங்கள். அவற்றின் மூலம் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பிய பெருமை அமெரிக்காவைச் சாரும்.

சமீபத்திய வியூகம் இஸ்ரேலும், பலஸ்தீனமும் அருகருகே இரு தேசங்களாக இருக்கக்கூடிய தீர்வு யோசனையாகும். அதாவது யூதர்களுக்கு ஒரு தேசம் இருப்பதைப் போல, பலஸ்தீனர்களுக்கும் ஒரு தேசம் இருக்கக்கூடிய சமாதானத் திட்டம் பற்றி அமெரிக்கா பேசுகிறது. அந்தத் தீர்வுத் திட்டம் பற்றி பேசுமாறு இரு தரப்பினரையும் வலியுறுத்தியதுடன் நில்லாமல், இதற்கான மேடையையும் அமைத்துக் கொடுத்தது.

ஆனால், ஒரு நிபந்தனை. இஸ்ரேலிய பிரதிநிதிகளுடன் பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர்கள் மாத்திரமே பேச வேண்டும். ஹமாஸ் இயக்கத்திற்கு அனுமதி இல்லை. அமெரிக்காவின் சவாலை ஏற்று மேற்குக் கரையிலும், காஸாவிலும் தேர்தலில் போட்டியிட்டு பலஸ்தீனர்களின் ஆதரவை வென்ற இயக்கமாக இருந்தபோதிலும், ஹமாஸை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மாட்டாது. அது பலஸ்தீனர்களைப் பிரித்தாளும் அமெரிக்க ராஜதந்திரத்தின் முக்கியமான தந்திரம்.

இதன் காரணமாக, சர்வதேச அரங்கில் பலஸ்தீனர்கள் என்ற பதத்தைப் பயன்படுத்துகையில் பிரச்சனை. பொதுவாக, சகல பலஸ்தீனர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக பலஸ்தீன விடுதலை இயக்கம் காணப்படுகிறது. மேற்குலகம் பலஸ்தீன அதிகாரசபையை அங்கீகரிக்கிறது. யூத ஆக்கிரமிப்பை ஆட்சேபிக்கும் நாடுகள் ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கின்றன. இதில் எந்தவொரு அமைப்பும் ஐக்கிய நாடுகள் சபையில் முழு உறுப்புரிமையைக் கொண்டிருக்கவில்லை. பலஸ்தீன விடுதலை இயக்கம் ஐநா பொதுச்சபையில் அங்கத்துவ நாடாக அல்லாமல் கண்காணிப்பு அமைப்பாக இருக்கிறது.

இத்தகைய பின்னணியில், பலஸ்தீன தேசம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடாக மாற வேண்டும் என்கிறார், அப்பாஸ். எதிர்வரும் 23ஆம் திகதி ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய பின்னர், பலஸ்தீனத்தைத் தனியொரு தேசமாக அங்கீகரிக்கக் கோரும் யோசனையை ஐநா செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் தனியொரு தேசமாக அங்கீகரிக்கப்படுமானால், பலஸ்தீனர்களுக்கு சுயநிர்ணய உரிமையுள்ள தேசம் கிடைத்து விடும். இது இவர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற வழிவகுக்கும் என்றெல்லாம் எவராவது நினைத்தால், இந்த நினைப்பை சற்று தள்ளி வைத்து விடுவது நல்லது. ஏனெனில், பலஸ்தீனத்தை தனியொரு தேசமாக அங்கீகரிக்கும் நடைமுறையில் உள்ள பிரச்சனைகள் பூதாகரமானவை. அந்த நடைமுறை மிகவும் சிக்கலானது.

முதல் பிரச்சனை பலஸ்தீன தேசத்தின் எல்லைகள் பற்றியதாகும். மேற்குக் கரையும், காஸாவும் எதிர்கால பலஸ்தீன தேசத்தின் நிலப்பரப்புகளாக இருக்க வேண்டும் என்பதும் கிழக்கு ஜெருசலேம் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்பதும் பலஸ்தீனர்களின் கோரிக்கை. ஆனால், இந்த நிலப்பரப்பின் எல்லைகள் 1967ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த எல்லைகளை ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது பலஸ்தீனர்களின் நிபநதனை. இந்த நிபந்தனை பூர்த்தியாக வேண்டுமாயின், 1967ஆம் ஆண்டு ஆறு-நாள் யுத்தத்தின் மூலம் இஸ்ரேலியப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள் யாவும் பலஸ்தீனர்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட வேண்டும். மேற்குக் கரையில் யூதக்குடியிருப்புக்கள் அகற்றப்பட வேண்டும். இந்த விஷயத்தில், இஸ்ரேலின் சம்மதம் என்பது குதிரைக் கொம்புதான். இஸ்ரேலும், பலஸ்தீனர்களும் ஏதேனும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினால் 1967இற்கு முற்பட்ட எல்லைகள் என்ற தீர்வின் அடிப்படையில் பேச வேண்டுமென பராக் ஒபாமா வலியுறுத்தியபோதிலும், அது சாத்தியமற்ற யதார்த்தத்திற்குப் புறம்பான யோசனை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ கூறியிருப்பதை ஞாபகப்படுத்தலாம்.

இந்தப் பிரச்சனையைத் தாண்டி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றால் அங்கு வீட்டோ நெருக்கடி. ஒரு தேசம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடாக வேண்டுமானால், அதனை முதலில் பாதுகாப்புச் சபை அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த யோசனை பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். பாதுகாப்புச் சபையில் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றில் 14 நாடுகளின் ஆதரவு அப்பாஸூக்கு இருந்தாலும், அமெரிக்கா எதிர்த்தால் அப்பாஸின் கனவு சாத்தியப்பட மாட்டாது. ஏனெனில், எந்தவொரு யோசனையையும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்துச் செய்ய அமெரிக்காவால் முடியும். அதைத் தான் செய்யப் போவதாக அமெரிக்கா கூறுகிறது.

அப்படி நடந்தால் மற்றுமொரு பரிகாரம் இருக்கிறது. அது ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவம் பெறாத கண்காணிப்பு இராஜ்ஜியம் என்ற அந்தஸ்தைப் பெற விண்ணப்பிப்பது தான். தற்போது, வத்திக்கானுக்கு அத்தகைய அந்தஸ்து உள்ளது. அந்த விண்ணப்ப நடைமுறையில் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவையில்லை. பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது போதுமானது. அதாவது, 129 நாடுகள் அங்கத்துவம் பெறாத கண்காணிப்பு இராஜ்ஜியமாக பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்தக் கட்டுரை எழுதப்படும் சமயம் வரையில் 126 நாடுகளின் ஆதரவு உள்ளதாக பலஸ்தீன அதிகாரசபையின் தூதுவர் அறிவித்திருக்கிறார். அடுத்து வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கவும் கூடும். பலஸ்தீன இராஜ்ஜியத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவும் கூடும். ஆனால், அத்துடன் பிரச்சனை முடிந்து விடப் போவதிலலை.

பலஸ்தீன இராஜ்ஜியமாக அங்கீகரிக்கப்படுவது பலஸ்தீன விடுதலை இயக்கமா, பலஸ்தீன அதிகார சபையா என்ற பிரச்சனை பூதாகரமாகக் கிளம்பும். பலஸ்தீன விடுதலை இயக்கம் என்றால் முதல் பிரச்சனை, அது இயக்கம் என்பது தான். இது அரசியல் யாப்பை உடைய தேசம் அல்ல. ஒரு சாசனத்துடன் கூடிய இயக்கமாக இருப்பதால், இது இராஜ்ஜியமாக செயற்பட முடியாது. பலஸ்தீன விடுதலை இயக்கம் பலஸ்தீன இராஜ்ஜியமாக அங்கீகரிக்கப்பட்டால், பலஸ்தீன அதிகாரசபையின் அங்கத்தவர்களே ஐநா பொதுச்சபையில் அமர வேண்டி வரும்.

பலஸ்தீன அதிகாரசபை என்பது ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. 2006ஆம் ஆண்டு நடந்த பலஸ்தீன சட்டசபைத் தேர்தலில், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பத்தா இயக்கம் ஹமாஸின் முன்னிலையில் தோல்வி கண்டதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பொருளாதாரத் தடைகள் முதலான பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் ஹமாஸை காஸா பள்ளத்தாக்கிற்குள் முடக்கி, பத்தா தலைமையிலான பலஸ்தீன அதிகாரசபையை அங்கீகரித்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பலஸ்தீன அதிகாரசபையே பலஸ்தீன தேசமாக அங்கீகரிக்கப்படுமாயின், மேற்குக்கரை - காஸா நிலப்பரப்பிற்கு வெளியே வாழும் பலஸ்தீனர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுவதைத் தவிர்க்க முடியாது. அத்துடன், பலஸ்தீன மண்ணில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாமல் போகலாம். பலஸ்தீன அதிகாரசபைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் மேற்குலக நாடுகளின் தலையாட்டி பொம்மையாக பலஸ்தீன மக்கள் செயற்படக்கூடிய நிலையை உருவாக்கும் என்பதால் தானோ என்னவோ ஐநாவில் உறுப்புரிமை கோரும் முயற்சியை ஆட்சேபிப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.














பலஸ்தீனை ஐக்கியநாடுகள் சபையின் முழுஉறுப்புரிமை நாடாக்குவதற்கான திட்டம்.






பலஸ்தீனை ஐக்கியநாடுகள் சபையின் முழுஉறுப்புரிமை நாடக்குவதற்கான திட்டமொன்றை அந்நாட்டு அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.1967ஆம் ஆண்டுஉள்நாட்டுப்போரின்போது இஸ்ரேலினால் கைப்பறப்பட்ட பிரதேசங்கள்அடங்களாக மற்றும் கிழக்கு ஜெரூஸலத்தை சுதந்திரப்பலஸ்தீனின் தலைநகராக்குவதற்குமான கோரிக்கைளுடன் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஐக்கியநாடுகள் சபையில் இத்திட்டத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர். பலஸ்தீனமக்களின் பிரதிநிதியாக பலஸ்தீன அதிகாரசபை விளங்குகின்றது. பலஸ்தீனமக்கள் நீண்டநாட்களாக சுதந்திரத்தைத் தேடுகின்றனர்.மேற்குக்கரை,கிழக்குஜெரூஸலம்,காஸா மற்றும் 1967ம்ஆண்டு ஆறுநாட்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இஸ்ரேலினால்கைப்பற்ற பகுதிகள் அடங்களான பலஸ்தீனஅரசை ஐக்கியநாடுகள் சபையின்முழுஉறுப்புரிமை நாடாக அங்கீகரிப்பதற்கான முயற்சி பலஸ்தீனஅதிகாரசபையினால்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.






பலஸ்தீனஅதிகாரசபை முன்வைத்துள்ள திட்டத்தின் படியான சுதந்திரபலஸ்தீனை அமைப்பதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன.கடந்த இருதசாப்தகாலமாக பலஸ்தீனுக்கும் - இஸ்ரேலிக்குமிடையில் இடையில் நடைபெற்றுவந்தபேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இருநாடுகளுக்குமிடையில் கடைசியநடைபெற்ற பேச்சுவார்த்தை சென்றவருடம் தோல்வியில் முடிவடைந்தது.தனிப்பட்டரீதியில்ஒவ்வொருநாடுகளிடமும்,
பலஸ்தீனை சுதந்திரநாடாக்குவதற்கு அங்கீகாரம்வழங்குமாறு கேட்டுக்கொண்டதன் மூலம், கடந்த வருடம் பலஸ்தீனஅதிகாரிகள் சுதந்திர பலஸ்தீனை உருவாக்குதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி வந்தனர்.








பலஸ்தீனுக்கு ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபை நாடுகளிடம் தற்போதுவரை கிடைக்கப்பெற்றுள் அங்கீகாரம்?



Recognise?
Yes
No

Permanent Security Council members
·         China
·         Russia
·         France
·         UK
·         US
Non-permanent Security Council members
·         Bosnia- Hercegovina
·         Brazil
·         Gabon
·         India
·         Nigeria
·         Lebanon
·         S. Africa
·         Colombia
·         Germany
·         Portugal
All General Assembly members
122
71
 SOURCE: UN, FOREIGN MINISTRIES





எதிர்வரும் செப்டம்பர்மாதம் 21ம் திகதி ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்தபொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயோக்நகரில் நடைபெறவுள்ளது.பலஸ்தீனைஐக்கியநாடுகள் சபையின் முழுஉறுப்புரிமை நாடாக்குவதற்கு,ஐக்கியநாடுகள்பாதுகாப்புச்சபையின் 15நாடுகளினதும் அங்கீகாரம் அவசியமாகும்.ஐக்கியநாடுகள் 
சபையில் அங்கம்வகிக்கும் 193உறுப்புநாடுகளின் 2/3 பெருன்பான்மையும் 
அத்தியவசியமானதாகும்.






ஆரம்ப நடவடிக்கையாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத்அப்பாஸ், பலஸ்தீனை ஐக்கியநாடுகள் சபையின் முழுஉறுப்புரிமை நடாக்குவதற்கானபிரேரணையை ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் எதிர்வரும் செப்டம்பர்மாதம் 23ம்திகதி சமர்பிப்பார்.பின்னர் செயலாளர்நாயகம்அவர்கள் ஐக்கியாடுகள் பாதுகாப்புச்சபை நாடுகளிடையே ஒரு குழுவை அமைப்பார்.இக்குழுவின் பதினைந்துநாடுகளில் ஒன்பதுநாடுகளின் ஆதரவைப்பெறவேண்டும். மேலும் அவ் ஒன்பது நாடுகளில் வீட்டோ அதிகாரமுள்ள அனைத்து நாடுகளும் இருக்கவேண்டியதுடன்,வீட்டோ அதிகாரமுள்ள ஒருநாடேனும் இப்பிரேரணையை நிராகரிக்கக்கூடாது. எனினும் அமெரிக்கா இதற்கு ஆதரவளிக்காது என்பதுடன் தனது வீட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தும் என ஏற்கனவே அறிவித்துள்ளதுடன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இப்பிரேரணைக்கு ஆதராவாக வாக்களிக்காது,எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






சமாதானப்பேச்சுவார்த்தைகளின் மூலமே சரியானவொரு தீர்வை எட்டமுடியும்.என இஸ்ரேல் தொடாந்தும் தெரிவித்து வருகின்றது.எனினும் இஸ்ரேலினால் 1967ம் ஆண்டு போரின் போது ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளை,பலஸ்தீனிடம் வழங்க அந்நாடு தயாரில்லை.27ஐரோப்பிய நாடுகளில் ஒன்பது நாடுகளே 1967ம் ஆண்டுகைப்பற்றப்பட்ட பலஸ்தீனப்பிரதேசங்கள் உடனான,பலஸ்தீனை அமைப்பதற்கானஆதரவை வழங்கியுள்ளது.ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலினை எப்போதும் அங்கீகரிக்கப்போவதில்லையென தொடர்ந்து தெரிவித்துவருகின்றது.யூதர்களால் களவாடப்பட்ட எமது சகோதர்களினதும், எமது முழுமுஸ்லிம் சமூகத்தினதும் சொத்தான பலஸ்தீனைதிரும்பப்பெறுவதற்கும எப்போதும் அல்லாஹ்விடம் பிரார்திப்போம்.