புனிதரமழான் மாதத்தின் ஆரம்பம்முதல் தற்போதுவரை குவைட்டில் ஆண்,பெண்கள் அடங்களாக ஆயிரத்திக்கும் அதிகமானவர்கள் புனிததாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என அந்நாட்டின் இஸ்லாமிய அமைப்பொன்று தெரிவித்துள்ளது. தாம் உண்மைநிலையை தெரிந்துகொள்வதற்காக மிகப்பெரிய முயற்சிசெய்ததாகவும், இதன்மூலம் இஸ்லாமேஉண்மையான மார்க்கம் என்பதை தாம் அறிந்து கொண்டதாகவும் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியஅவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போது அவர்கள் தெரிவித்தாக, குவைட்டின் அவ்இஸ்லாமிய அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் தாம்இஸ்லாத்தில் நுழைவதற்கு குவைட்டில்உள்ள முன்மாதிரியானமக்களே காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.
குவைட்டின் இவ்இஸ்லாமிய அமைப்பானது,புதிதாக இஸ்லாத்திக்கு வருபவர்களுக்கு மார்க்ககல்வி மற்றும் ஏனையசேவைகளை வழங்குகின்றது.1978ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை53,000ற்கும் அதிகமான முஸ்லிம்அல்லாதவர்கள் இவ்அமைப்பின்மூலம் இஸ்லாத்தைஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும் .இதேவேளை கடந்தசில வருடங்களாகஐரோப்பாவில் மிகவேகமாக வளாந்துவரும் மதமாக இஸ்லாம்காணப்படுகின்றது எனஐரோப்பாவின் பலபுகழ்பெற்ற பத்திரிகைகள் செய்திவெளியிட்டுள்ளன.
0 Comments