பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன.



பலஸ்தீனை சுதந்திரநாடாகப் பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பலஸ்தீனின் ராஜதந்திரியொருவர் ஐக்கியநாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.ஸென் வின்சன்ட் மற்றும் கிரீநடீன்ஸ் உட்பட 126நாடுகள்,1967ம் ஆண்டு ஒப்பந்தத்தின் எல்லைகள் அடங்களாக சுதந்திர பலஸ்தீனை பிரகடணப்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளதாக,நியூயேர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் சபைக்கான பலஸ்தீனத்தூதுவர் ரியாஸ்மன்ஸூர் தெரிவித்துள்ளார்.சுதந்திர பலஸ்தீனின்தலைநகராக அல்குத்ஸ்நகரம் முன்மொழியப்பட்டுள்ளது.

 


ஐக்கியநாடுகள் சபைக்கான பலஸ்தீனின் ராஜதந்திரியின் கருத்துப்படி, இதுவரை 126நாடுகள்சுதந்திரப்பலஸ்தீனை அமைப்பதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் ,அதனை ஐக்கியநாடுகள் சபையின் புதியஅங்கத்துவ நாடக்குவதற்கும் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளன. கடந்த செப்டம்பர்மாதம் 20ஆம்திகதி பலஸ்தீனை சுதந்திரநாடாகப் பிரகடணப்படுத்துவதற்கு ஐக்கியநாடுகள் சபையில் ஒரு பிரேரணை முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.எனினும் பலஸ்தீனை சுதந்திரநாடக்குவதற்காக மேற்கொள்ளும்முயற்சியானது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குரியான விடயமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments