சீனாவின் வடமேற்குப்பகுதியின் 'இங்குசேடியா' பிரதேசத்தில் 400க்கும் அதிகமானபள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக சீனாவின் செய்திநிறுவனமொன்று தெரிவிக்கின்றது.விஞ்ஞானம் சார்ந்த அறிவினை மேம்படுத்தும்நோக்கிலும், விஞ்ஞானம்,கலாச்சாரம் மற்றும் சட்டம் சாந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலேயுமே பள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சமூக,கலாச்சார மற்றும் சமயம் தொடர்பான ஐம்பதாயிரத்துக்கும்அதிகமானபுத்தகங்கள், தொலைக்காட்சிபெட்டிகள் மற்றும் DVD பிளேயர்கள் கொண்ட ஒரு தொகுதிப்பொருட்களை, இப்பிரதேச உள்ளநாட்டுஅரசு பள்ளிவாசல்களின் வாசிகசாலைகளுக்கு வழங்கியுள்ளது.
முஸ்லிம்களின் கலாச்சார அறிவினை வளர்த்துக்கொள்வதற்காக வேண்டி பள்ளிவாசல்களின் வாசிகசாலைகளில் பல்வேறான விஞ்ஞான ஊடகங்கள்காணப்படுவதாக,சீனாவின் இங்குசேடியா பகுதியில் உள்ள ஓர் பள்ளிவாசலின் இமாம் தெரிவித்தார்.இங்குசேடியாப் பகுதியில் இரண்டுமில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இத்தொகையானது இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகையில் 1/3 பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments