டியூனிசியா தேர்தல் முடிவுகளின்படி அந்நஹ்ழா இஸ்லாமியக்கட்சி முன்னிலையில்.






டியூனிசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் தற்போதைய நிலவரங்களின்படி அந்நஹ்ழா இஸ்லாமியக் கட்சியானது முன்னனியில் உள்ளதாகசெய்திகள்தெரிவிக்கின்றன. 217ஆசனங்களுக்காக நடைபெற்ற தேர்தலில்,87ஆசனங்களுக்கான முடிவுகளை செவ்வாய்க்கிழமையன்று டியூனிசியாவின் தேர்தல்ஆணையகம் அறிவித்தது.அதன்படி அந்நஹ்ழா இஸ்லாமியக் கட்சி 37ஆசனங்களையும்குடியரசுக்கான காங்கிரஸ் கட்சி 14ஆசனங்களையும்,அரீதா சாபியா கட்சி 11ஆசனங்களையும்,எத்தாகடுல் கட்சி 10ஆசனங்களையும் மற்றும் முற்போக்குஜனநாயகக் கட்சி 5ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன. டியூனிசியாவில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை 217 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பாரளுமன்றத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் 11,000 இற்கும் அதிகமான வேட்பாளர்கள்போட்டியிட்டனர்.கடந்த இரு தசாப்தங்களாக டியூனிசியாவை ஆட்சிசெய்த முன்னால்ஆட்சியாளாரான ஸைன் அல்ஆபிதீன் பின் அலி,டியூனிசியாவில் நடைபெற்ற மக்கள்
புரட்சியின் மூலம் பதவிகவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும்.மேலும் டியூனிசியாவின் அந்நஹ்ழா இஸ்லாமியக் கட்சியானது அங்குதடைசெய்யப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவதுசுதந்திரத் தேர்தலில் தற்போதைய நிலவரங்களின்படி அக்கட்சி முன்னனியில் 
உள்ளதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




டியூனிசியாவின் தலைநனரிலுள்ள அந்நஹ்ழா கட்சியின் தலைமையகத்தின் முன்னால்,அக்கட்சியின் ஆதரவாளர்கள் தமது வெற்றியை கொண்டாடினர்.'நாங்கள் முஸ்லிம்கள்'
'நாங்கள் சரண்அடையவில்லை' போன்ற கோஷங்களை எழுப்பியவர்களாக அவர்கள்தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போதுவரை 40வீதமான ஆசனங்களை அந்நஹ்ழா இஸ்லாமியக்கட்சி பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments