யுனெஸ்கோ அமைப்பில் பலஸ்தீனுக்கு உறுப்புரிமை.






பலஸ்தீனுக்கு ஐக்கியநாடுகள் சபையின் விஞ்ஞான கல்வி கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) முழுமையான அங்கத்துவம் கிடைக்கப் பெற்றுள்ளது. திங்கட்கிழமையன்று பிரான்ஸின் பரிஸ்நகரில், பலஸ்தீனுக்கு ஐக்கியநாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக்கொள்வதற்காக 173நாடுகளுக்கிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது.இவ்வாக்கெடுப்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக 107நாடுகளும்,எதிராக 14நாடுகளும் வாக்களித்தன.மேலும் 52நாடுகள்
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.3/2 பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டதற்காக பலஸ்தீனுக்கு யுனேஸ்கோ முழுஉறுப்புரிமை வழங்கப்படுவதாக, யுனேஸ்கோ அமைப்பின் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.மேலும் வாக்கெடுப்பின் போது பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல்,அமெரிக்ககனடா,அவுஸ்ரேலியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் வாக்களித்திருந்தன.இதேவேளை பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.


கடந்த மாதம் பலஸ்தீனுக்கு ஐக்கியநாடுகள் சபையில் முழுஉறுப்புரிமை
பெற்றுக்கொள்வதற்கான பிரேணனை பலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸினால்ஐக்கியநாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது.எனினும் இப்பிரேரணை அமெரிக்காவின் இரத்துச் செய்யும் அதிகாரத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Post a Comment

0 Comments