நபி(ஸல்) அவர்களை களங்கப்படுத்தும் முயற்சி- கேலிச்சித்திரம் வரைந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது தாக்குதல்.





நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்து அடுத்தபதிப்பில் வெளியிட திட்டமிட்டிருந்த சார்லிஹப்டோ எனும் சஞ்சிகையின் தலமையகம் மீது தாக்குதல்நடாத்தப்பட்டுள்ளது. சார்லிஹப்டோ சஞ்சிகையின் அடுத்தபதிப்பில் ஆசிரியர் தலையங்கமாக நபி(ஸல்) அவர்களின் கேலிச்சித்திரம்வெளியிடப்படவிருந்தது. இதனால் புதன்கிழமையன்று பிரான்ஸின் பரிஸ்நகரில் அமைந்திருக்கும் சர்லிஹப்டோநிறுவனம் மீது பெற்றோல்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.பிரான்ஸ் முஸ்லிம்கள்நம்பிக்கைப் பேரவையின் தலைவர் முஹம்மட் முசாயி இத்தாக்குதலை கண்டித்துள்ள அதேவேளை, இஸ்லாத்தை கேலிசெய்யும்தொனியில் இந்த சஞ்சிகை செயற்பட்டுள்ளது.எனினும் எல்லாவிதமான வன்முறைகளில் இருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் ஏவியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.




இதேவேளை டியூனீசியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அந்நஹ்ழாகட்சிவெற்றியீட்டியதை மறைமுகமாக தாக்கும்நோக்குடன் அடுத்தபதிப்பில் கட்டுரையொன்றையும் பிரசுரிக்க இச்சஞ்சிகை திட்டமிட்டிருந்தது.உலகில் மதச்சார்பற்ற முதலாவது நாடென்று மார்த்தட்டிக்கொள்ளும் பிரான்ஸ் முஸ்லிம்களின் உரிமைகளில்
தலையிடுவது சர்வதேசஅளவில் கண்டிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐனாதிபதி நிகோலஸ் சாகோஸி இதற்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments