பிரான்ஸூக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாட்டுக்கு 40ஆயிரம் முஸ்லிம் அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.







ஆர்மேனியாவில் 1915ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலைக்கு,துருக்கியை போர் குற்றவாளியாக்குவதற்காக பிரான்ஸினால் கொண்டுவரப்பட்டதீர்மானத்துக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 40ஆயிரம் முஸ்லிம் அறிஞர்கள்,புத்திஜீவிகள் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.துருக்கிக்கு எதிராக பிரான்ஸினால் கொண்டுவரப்படும் தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றுஎனவும்,பிரான்ஸூக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாட்டுக்குகே சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் ஒன்றியம் ஆதரவளித்துவருவதாகவும்,சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி அலி கரதாகிஹி தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் சிலவைப்போர் வீரர்களால் புரியப்பட்ட போர் குற்றங்கள்,யூதப்படுகொலைகள் மற்றும் சேர்பியா மீதான கொடுமைகள் பற்றி கேட்பதற்குயாரும் இல்லை என கலாநிதி அலி தெரிவித்ததுடன், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி சிலவைப் போர்வீரர்கள் நாட்டுமக்களை அநியயமாகக் கொலைசெய்தும், தீவைத்தும் அழித்தனர்.மனிதகுலத்துக்கு எதிரான இப்போர் 
குற்றத்தை ப்பற்றி பிரான்ஸ் மௌனமாக இருப்பது ஏன் எனவும் கலாநிதி அலி கேள்வியெழுப்பினார்.துருக்கியின் மீது தவறான சர்சையைக் கொண்டுவருவதே பிரான்ஸின் நோக்கமாகும் என கலாநிதி அலி கரதாகிஹி தெரிவித்தார்.மேலும்பிரான்ஸின் ஜனாதிபதி நிக்கலஸ் சகோஸியின் ஆட்சிக்காலத்திலேயே பிரான்ஸிய முஸ்லிம்களுக்கு எதிராக புர்கா தடைச்சட்டம் போன்ற பல தடைச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டதை கலாநிதி அலி கரதாகிஹி சுட்டிக்காட்டினார்.





Post a Comment

0 Comments