ஜெர்மனியபாடசாலைகளில் தொழுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி.



ஜெர்மனியப் பாடசாலைகளில் இஸ்லாமியமுறைப்படி மாணவர்களுக்கு தொழுவதற்கான உரிமையை அந்நாட்டின் சமஷ்டிநீதிமன்றமொன்று வழங்கியுள்ளது.இரண்டுவருடங்களக்கு மேலாக நீடித்திருந்த சட்டரீதியான பிரச்சினைகளுக்குப் பின்னரே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.ஜெர்மனியில் 4மில்லியனுக்கும் அதிகமானமுஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாத்தைத் தழுவிய பெற்றோர்களின் 16வயதுக்குமேற்பட்ட பிள்ளைகள் தமது இடைவேளை நேரத்தில் அவர்களின் மேலங்கியைக் கழற்றி அவற்றின் மீது அவற்றின் மீது பாடசாலை மண்டபத்தில் தொழுதுள்ளனர்.இதன் போது பாடசாலை அதிபர் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும்
பெர்லின் உயர்பாடசாலைகளின் மைதானங்களில் தொழுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்து தொழுவதற்கான அனுமதியை மறுத்தார்.இதன்பின்னரே பிரச்சினை ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஜெர்மனியின் சமஷ்டிநீதிமன்றமொன்று பாடசாலைகளில் முஸ்லிம்மாணவர்களுக்கு
தொழுவதற்கான அனுமதியை வழங்கியது.

Post a Comment

0 Comments