அமெரிக்காவின் உளவுவிமானம் ஈரான் இராணுவத்தால் தரையிறக்கம்.








அமெரிக்காவின் உயர்ரக உளவுவிமானமொன்று ஈரானின் கிழக்குப் பகுதியில்கடந்த டிசம்பர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈரானிய இராணுவத்தால்தரையிறக்கப்பட்டுள்ளது.ராடர் கருவிக்கு அகப்படாத அமெரிக்காவின் RQ-170 எனும்ஆளில்லா உளவுவிமானமே ஈரான் இராணுவத்தின் இலத்திரனியல் படைப்பிரிவினால் ஆப்கானிஸ்தான் எல்லையிலருந்து சுமார் 225கிலோமீற்றர் தூரத்தில்உள்ள ஈரானின் கன்தஹார் நகரின் வான்பரப்பில் பறந்துகொண்டிருக்கும் போது தரையிறக்கப்பட்டுள்ளது.இதேவேளை தரையிறக்கப்பட்ட அமெரிக்காவின் உளவுவிமானத்தை பொறியியல் ஆய்வுக்கு உட்படுத்தப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இவ் உளவுவிமானமானது  ராடார் கருவிக்கு அகப்படாத  அமெரிக்க இராணுவத்தின் மற்றுமோர் தயாரிப்பான B-2 எனும் குண்டுவீச்சு விமானத்தை ஒத்தது என்பது குறிப்பிடத்தக்கது.




ஈரானாலில் தரையிறக்கப்பட்ட ஆளில்லா உளவுவிமானமானது அமெரிக்காவின்உளவுநிறுவனமான CIA யின் வேவுபார்க்கும் விமானம் என்பதுடன்,ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க உளவு அமைப்பின்தளத்துடன் இவ்விமானத்துக்கு தொடர்பு இருந்தது எனவும் அமெரிக்காவின் இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியுடனான ஈரான் பகுதிகளில் பறந்து,ஈரான் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்குஇவ்விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானால் தரையிறக்கப்பட்ட விமானமானது உயர்கண்கானிப்புத்திறன்,உயர் இலத்திரனியல்தொடர்பால்திறன் மற்றும் ராடார் கருவியிலிருந்து தப்பிக்கும் ஆற்றல் போன்றவற்றைக் கொண்டிருந்ததாக ஈரான் இஸ்லாமியக்குடியரசின் புரட்சிப்படைத்
தளபதி தெரிவித்தார்.








Post a Comment

1 Comments