புதிய அரசாங்கத்துக்கு சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அல் அஸ்ஹர் தலைமை இமாம் அழைப்புவிடுத்துள்ளார்.






எகிப்தின் முன்னால் பிரதமர் கமால் எல் கன்ஸூரி தலைமையிலான
அரசாங்கத்துக்கு,பொருளாதாரத்தேவைகளைக் கருத்திற்கொண்டு ஆட்சியமைக்கசந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்தலைமையகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் தலைமை இமாம் கலாநிதி அஹமத் அல் தையிப் அழைப்புவிடுத்துள்ளார்.


தஹ்ரீர் சதுக்கத்தில் இராணுவத்துக்கும்,ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஐந்து நாட்களுக்கு மேலாக நீடித்திருந்தகடும்மோதல்களுக்குப் பின்னர்,அரசாங்கத்தலைமையகத்துக்கு முன்னால்ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கி,அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை காட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments