புனித அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க முன்வருமாறு உலகமுஸ்லிம்களுக்கு அல்-அக்ஸா இமாம் அழைப்பு.






பலஸ்தீனின் புனித அல்-அக்ஸா பள்ளிவாசலில் தமது மேலாதிக்கத்தை
விரிவுபடுத்த ஸியோனிச அரச அதிகாரிகள் முயற்சி செய்துவருவதால் அல்-அக்ஸா பள்ளிவாசல் அபாய நிலமையில் இருப்பதாக, அக்ஸா பள்ளிவாசலின் இமாம் எச்சரித்துள்ளார்.எனவே புனித அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க உலகமுஸ்லிம்கள் ஒன்றினையுமாறு அக்ஸாபள்ளிவாசலின் இமாம் புதன்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர், அல்-அக்ஸா பள்ளிவாசலின் பாபுல் முக்ரீபா வாயிலானதுஉடைந்தவிழக்கூடிய நிலையில் உள்ளதாகவும்,அது உடைந்துவிழுந்தால்மக்களுக்கு ஆபத்தாகும் என்றும் ஸியோனிஸ்டுகள் அறிவித்தனர். இதன்பின்னர் புதன்கிழமை காலையன்று தீவிர ஸியோனிசவாதிகள் பலர் புனித அல்-அக்ஸா பள்ளிவாசலின் பாபுல் முக்ரீபா வாயிலினூடாக நுழைந்தாக குத்ஸ் சர்வதேசஅமைப்பின் பிரதிஉயர்நிலை அதிகாரியும்,அல்-அக்ஸா பள்ளிவாசலின் இமாமுமான செய்க் யூசுப் ஜூம்ஆ ஸலாமா இணையதள செய்திநிறுவனமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.




தீவிர ஸியோனிஸ்டுகள் புனித அல்-அக்ஸா பள்ளிவாசலில் தொடர்ச்சியாகதொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதுடன், இதனால் பள்ளிவாசலின்உறுதித்தன்மையை குறைக்கின்றனர்.அல்-அக்ஸா பள்ளிவாசலை அழித்துவிட்டுஅவ்விடத்தில் ஸலமன் ஆலயமொன்றை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதுடன்,புனித குத்ஸ் நகரை யூதமயமாக்குவதற்கும் ஸியோனிசவாதிகள் முயற்சித்து
வருவதாக அவர் தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து புனித அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகப்பதற்கு ஒன்றுபடுமாறு உலகமுஸ்லிம்களுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார். அல்-அக்ஸா பள்ளிவாலுக்காகவும்,எமது பலஸ்தீன உறவுகளுக்காகவும் வல்லநாயன் அல்லாஹ்விடம் பிரார்திப்போம்.!!

Post a Comment

0 Comments